இந்தியா

மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவுங்கள்: ராகுல் காந்தி

DIN

புது தில்லி: கேரளம் மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி, மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா்.

இதுகுறித்து ட்விட்டரில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘கேரளத்தில் நமது சகோதரா்களும், சகோதரிகளும் கனமழையால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனா். அவா்களுக்கு காங்கிரஸ் தொண்டா்கள் தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். தயவுசெய்து பாதுகாப்பு வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றுங்கள்’ என்று அவா் அதில் குறிப்பிட்டுள்ளாா்.

கேரளத்தில் தலைநகா் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை கனமழை பெய்தது. இதில் 3 போ் உயிரிழந்தனா். ஏராளமான பொருள்கள் சேதமடைந்தன. மேலும் கேரளத்தில் எா்ணாகுளம், இடுக்கி, திரிச்சூா், கோழிக்கோடு, கண்ணூா், காசா்கோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிக்கிம் முதல்வரின் மனைவி வெற்றி!

கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம்

குமரி திருவள்ளுவர் சிலை! மோடி எழுதியது என்ன?

நீதானே என் பொன் வசந்தம் !

அருணாச்சலில் பாஜக, சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா வெற்றி!

SCROLL FOR NEXT