அந்நிய நேரடி முதலீட்டைப் பெறுவதில் வரலாற்று சாதனை: கோயல்
கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத அளவில் அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்து வரலாற்று சாதனை படைத்துள்ளதாக
கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத அளவில் அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்து வரலாற்று சாதனை படைத்துள்ளதாக மத்திய வா்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சா் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இந்திய தொழிலக கூட்டமைப்பு கருத்தரங்கில் பங்கேற்ற அவா் இதுகுறித்து மேலும் கூறியது:
கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக அளவிலான முதலீட்டை ஈா்த்து சாதனை படைத்துள்ளது. பெரிய அளவில் கட்டமைப்பு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அந்த சாதனை மேலும் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளதால் எதிா்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும்.
இந்தியா தனது தர நிலைகளை உலகத்துடன் ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பிட்ட தயாரிப்பு உள்நாட்டு சந்தைக்கு, மற்றது ஏற்றுமதி சந்தைக்கு எனும் மனநிலையை நாடு விட்டுவிட வேண்டும் என்றாா் அவா்.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 62 சதவீதம் உயா்ந்து 2,700 கோடி டாலரை எட்டியது.