நாட்டில் புதிதாக 8,865 பேருக்கு தொற்று: 287 பேர் பலி 
இந்தியா

நாட்டில் புதிதாக 8,865 பேருக்கு தொற்று: 287 பேர் பலி

நாட்டில் கடந்த  24 மணி நேரத்தில் புதிதாக 8,865 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 287 பேர் உயிரிழந்துள்ளனர்.

ANI

புது தில்லி: நாட்டில் கடந்த  24 மணி நேரத்தில் புதிதாக 8,865 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 287 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 8,865 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,30,793-ஆக உள்ளது. இது 525 நாள்களுக்குப் பிறகு மிகக் குறைவான எண்ணிக்கையாகும்.

மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் நோயாளிகள் எண்ணிக்கை 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அது தற்போது 0.38 சதவீதமாக உள்ளது. இது 2020 மார்ச் மாதத்துக்குப் பிறகு பதிவாகும் குறைந்த அளவாகும். குணமடைந்தோர் விகிதம் 98.27 சதவீதமாகும்.

நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 112.97 கோடியாக அதிகரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் போர்நிறுத்தத்துக்கு பகலில் சம்மதம்; இரவில் தாக்குதல்!

ரோஹித் சர்மா கேப்டனில்லை; இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்!

இட்லி கடை, காந்தாரா - 1 வசூல் நிலவரம்!

கனமழையால் மேகமலை அருவியில் வெள்ளம்!

குஜராத் பாஜக தலைவராக ஜெகதீஷ் விஸ்வகர்மா நியமனம்!

SCROLL FOR NEXT