பிகார்: மது விலக்கு குறித்து முதல்வர் நிதிஷ்குமார் தீவிர ஆலோசனை 
இந்தியா

பிகார்: மது விலக்கு குறித்து முதல்வர் நிதிஷ்குமார் தீவிர ஆலோசனை

பிகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் மதுவிலக்கு தொடர்பாக தீவிர ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்று வருகிறது.

DIN

பிகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் மதுவிலக்கு தொடர்பாக தீவிர ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்று வருகிறது.

பிகார் மாநிலத்தில் கடந்த 2016 ,ஏப்ரல் 5ஆம் தேதி பூரண மது விலக்கை முதல்வர் நிதிஷ்குமார் அமல்படுத்தினார். பின் மது மற்றும் அதன் தயாரிப்பு தொடர்பான அனைத்தும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது மது விலக்கை அமல்படுத்தி 5 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் அதை நீடிப்பது குறித்தான கூட்டத்தில் மாநில முதல்வர் நிதிஷ்குமார் ஆலோசனை செய்து வருகிறார்.

பிகாரில் மதுவிலக்கு அமலில் இருப்பதால் பெரும்பாலான பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது. முக்கியமாக கடந்த சில நாட்களில்  கோபால்கஞ்ச் மற்றும் மேற்கு சாம்பரன் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இதற்கிடையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு குறித்தான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழையால் வெள்ளம்! தண்ணீரில் மிதந்து சென்ற உணவகம்! | Mexico

மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது!

கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்! மரத்தில் மோதி விபத்து! 5 பேர் காயம்! | California

இட்லி கடை வெற்றியா? தோல்வியா?

6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

SCROLL FOR NEXT