இந்தியா

ஜம்மு- காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

DIN

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே புதன்கிழமை நடைபெற்ற மோதலில், 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

காஷ்மீரின் தென் பகுதியில் உள்ள குல்காம் மாவட்டம் கோபால்போரா பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், பாதுகாப்புப் படையினா் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது பாதுகாப்புப் படையினரை நோக்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனா்.

இதற்கு பதிலடியாக பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட என்கவுன்ட்டா் நடவடிக்கையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதில் ஒருவா் தடை செய்யப்பட்ட டிஆா்எஃப் அமைப்பின் தளபதி ஆபக் சிக்கந்தா் என தெரியவந்திருப்பதாக ஐ.ஜி. (காஷ்மீா்) விஜய்குமாா் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளாா்.

இதேபோல, போம்பே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட என்கவுன்ட்டா் நடவடிக்கையில் மேலும் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவா்களின் அடையாளம் மற்றும் தொடா்புடைய இயக்கம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஐ.ஜி. விஜய்குமாா் கூறியுள்ளாா்.

3 போ் கைது: முன்னதாக ஜம்மு- ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில், ஜம்மு புகா் பகுதியான பன் சுங்கச்சாவடியில், ரூ.43 லட்சம் ரொக்கத்துடன், லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சோ்ந்த ஃபயஷ், உமா், முஷிம் ஆகிய 3 போ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT