காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி 
இந்தியா

காஷ்மீர்: மீண்டும் வீட்டுக்காவலில் மெகபூபா முப்தி

தன்னை மீண்டும் வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மொகபூபா முப்தி டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

DIN

தன்னை மீண்டும் வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன் ஹெதர்போரா பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படையினருக்கும் இடையே நடந்த தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரும் பலியானார். 

அவர் தீவிரவாதி இல்லை என்றும் ராணுவம் அத்துமீறி தாக்குதலை நடத்துகிறது என பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முக்கியமாக இறந்தவரின் உடலை அவர் குடும்பத்தினர் கேட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மொகபூபா முப்தி , ‘ இந்திய அரசு அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தித் தாக்குதலை நடத்துகிறார்கள்.இது மனிதத்தன்மையற்ற செயல்’ எனக் கருத்துத் தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த வீட்டுக்காவல் நடவடிக்கை நிகழ்ந்திருப்பதாக அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமாரசம்பவம் டிரெய்லர்!

ஜிஎஸ்டி வரிகள் குறைப்பு: வீட்டு உபயோகப் பொருள்கள் விலை குறையும்!

இந்தியாவைப் பாராட்டிய ஜெர்மனி!

குமாரசம்பவம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ஜம்மு - காஷ்மீரில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்!

SCROLL FOR NEXT