இந்தியா

நாட்டில் 10,302 பேருக்கு கரோனா தொற்று: 267 பேர் உயிரிழப்பு

DIN



புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,302 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 267 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 10,302

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,44,99,925​​​​​​​.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 11,787.
இதுவரை குணமடைந்தோர்: 3,39,09,708.​​​​​​​

நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.29​​​​​​​% என்றளவில் உள்ளது. இது கடந்த 2020 மார்ச் மாதத்திற்குப் பின் மிக அதிகமானது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 501. உயிரிழந்தோர் விகிதம் 1.35 சதவிகிதமாக குறைந்துள்ளது. கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,65,349.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,24,868. இது கடந்த 531 நாள்களில் இல்லாத அளவுக்குக் குறைவு. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.36 சதவிகிதமாக குறைந்துள்ளது.

வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 0.93% ஆக உள்ளது. இத கடந்த 57 நாள்களாக சதவீதத்திற்கும் கீழ் உள்ளது.

தினசரி பாசிடிவிட்டி விகிதம் 0.96% ஆக உள்ளது. இத கடந்த 47 நாள்களாக 2% சதவீதத்திற்கும் கீழ் உள்ளது.

பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதை உறுதி செய்யும் கணக்கீடு.

கரோனா தடுப்பூசி:   நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,15,79,69,274 கோடி. கடந்த 24 மணி நேரத்தில் 51,59,931 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பரிசோதனை: இந்தியாவில் இதுவரை மொத்தம் 63,05,75,279 பரிசோதனைகளும், செவ்வாய்கிழமை மட்டும் 10,72,863 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

அரியலூா் சிறுமி கொலை வழக்கில் மூவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு: உ. வாசுகி பேட்டி

SCROLL FOR NEXT