தில்லியில் ஒரே மாதத்தில் 1000 நகை பறிப்பு சம்பவங்கள் 
இந்தியா

தில்லியில் ஒரே மாதத்தில் 1000 நகை பறிப்பு சம்பவங்கள்

தலைநகர் தில்லியில் ஒரே மாதத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

தலைநகர் தில்லியில் ஒரே மாதத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் தில்லியில் நாளுக்கு நாள் நகை பறிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் மக்கள் சாலைகளில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையில் நீடித்து வருகிறது.

தில்லி காவல்துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

அக்டோபர் 8ஆம் தேதி முதல் நவம்பர் 11 தேதி வரையிலான கால இடைவெளியில் மட்டும் 1018 நகை பறிப்பு சம்பவங்கள் மீதான புகார்கள் பதிவாகியுள்ளன.

இதே காலத்தில் கடந்த ஆண்டு இதன் எண்ணிக்கை 920ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் இதே காலத்தில் 3894 வாகன திருட்டு சம்பவங்களும், 247 கொள்ளை சம்பவங்களும், 105 கொலை முயற்சி வழக்குகளும் பதிவாகியுள்ளன.

தில்லியில் அதிகரிக்கும் குற்றச் செயல்கள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. காவல்துறையினர் சட்டம், ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழகத்தில் நவ. 4 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ.1.84 கோடியில் நலத்திட்ட உதவிகள்

ஆா்டிஇ சோ்க்கை: தனியாா் பள்ளிகளில் இன்றும், நாளையும் மாணவா்கள் தோ்வு

நகை அடகு மோசடி: மீட்டுத் தரக் கோரி எஸ்.பி. -யிடம் மனு

SCROLL FOR NEXT