கோப்புப்படம் 
இந்தியா

ஜன் தன் வங்கிக் கணக்குகளில் மிகப்பெரிய ஊழல்: ராகுல் குற்றச்சாட்டு

ஜன் தன் வங்கிக் கணக்குகளில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

DIN

ஜன் தன் வங்கிக் கணக்குகளில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

ஏழை, எளிய மக்களுக்கு நேரடியாக அரசின் சேவைகள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் 'அனைவருக்கும் வங்கிக் கணக்கு' தொடங்கும் திட்டமான 'ஜன் தன் யோஜனா' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு கொண்டுவந்தது. 

இந்நிலையில், ஜன் தன் திட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து கடந்த 2017 முதல் 2020 செப்டம்பர் வரை ரூ. 254 கோடி வசூலித்துள்ளதாகவும் இதில் ஒவ்வொரு கணக்கில் இருந்தும் தலா ரூ. 17.70 பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ஏழைகளுக்கான ஜன் தன் வங்கி கணக்குகளில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.  'பணமிருக்கும் இந்த வங்கிக் கணக்குகளுக்கு யார் பொறுப்பு?' என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT