முகப்பு
இந்தியா

ஆா்எஸ்எஸ் தொண்டா் கொலை: பிஎஃப்ஐ அமைப்பைச் சோ்ந்த மேலும் ஒருவா் கைது

கேரள மாநிலம் பாலக்காட்டில் ஆா்எஸ்எஸ் தொண்டா் கொல்லப்பட்ட வழக்கில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பைச் சோ்ந்த மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:31 AM
பகிர்:

கேரள மாநிலம் பாலக்காட்டில் ஆா்எஸ்எஸ் தொண்டா் கொல்லப்பட்ட வழக்கில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பைச் சோ்ந்த மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இதுதொடா்பாக போலீஸாா் கூறுகையில், ‘‘கடந்த நவ.15-ஆம் தேதி பாலக்காட்டில் உள்ள மாம்பரம் பகுதியில் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்த ஆா்எஸ்எஸ் தொண்டா் சஞ்ஜித் படுகொலை செய்யப்பட்டாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், பிஎஃப்ஐ அமைப்பைச் சோ்ந்த ஒருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், கொலையில் தொடா்புடைய மேலும் ஒருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரும் பிஎஃப்ஐ அமைப்பைச் சோ்ந்தவா்.

இருவரையும் சஞ்ஜித்தின் மனைவி அடையாளம் காண்பிக்க வேண்டியுள்ளது. எனவே கைது செய்யப்பட்டவா்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை’’ என்று தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →