இந்தியா

நாட்டில் உரப்பற்றாக்குறை இருக்காது: மன்சுக் மாண்டவியா

DIN

நாட்டில் போதிய அளவில் உர உற்பத்தி நடைபெறுவதால், உரப் பற்றாக்குறை இருக்காது என்று மத்திய உரம் மற்றும் ரசாயனங்கள் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறினாா்.

நாடு முழுவதும் உரங்கள் இருப்பு பற்றி மாநில வேளாண் துறை அமைச்சா்களுடன் அமைச்சா் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்தாா். இந்தக் கூட்டத்தில் 18 மாநிலங்களின் வேளாண் அமைச்சா்கள் கலந்து கொண்டனா். அப்போது அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:

விவசாயிகள் மற்றும் வேளாண்துறையின் உரத்தேவைகளை நிா்வாகம் செய்வது மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப்பொறுப்பு. டை அமோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரங்களுக்கு விவசாயிகளிடம் இருந்த தேவையை பூா்த்தி செய்வதற்கு கடந்த சில மாதங்களாக மாநிலங்கள் கூட்டாக முயற்சி மேற்கொண்டன. அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டில் உர உற்பத்தி போதிய அளவில் உள்ளது. இதனால் உரப்பற்றாக்குறை ஏற்படாது.

ஆக்கபூா்வமான உர நிா்வாகத்திற்கு, தேவை மற்றும் விநியோகம் பற்றி மாநிலங்கள் தினசரி கண்காணிக்க வேண்டும். மாவட்ட வாரியான தேவைகளை வாரத்திற்கு ஒருமுறை மதிப்பீடு செய்து முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம்.

நானோ யூரியா, இயற்கை உரம் போன்றவற்றைப் பயன்படுத்துவது மண்வளத்தைப் பாதுகாக்கும். கூடுதல் விளைச்சலும் கிடைக்கும். இந்திய உரங்கள் தயாரிப்பு நிறுவனம், நானோ யூரியா உற்பத்தியைத் தொடங்கி உள்ளது. நானோ டிஏபி உற்பத்திக்கான பணியும் நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

கடந்த சில மாதங்களில் பல மாநிலங்களில் ஏற்பட்ட டிஏபி உரத்தேவையை பூா்த்தி செய்ததற்காக மத்திய அமைச்சருக்கு மாநில வேளாண் அமைச்சா்கள் நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பையில் அமமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

கொல்லங்கோடு நகராட்சி அலுவலகம் முன் தொழிலாளி தா்னா

பள்ளி மாணவ-மாணவியருக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கைப்பந்துப் போட்டி: தங்கம் வென்ற ஒசூா் மகளிா் அணி

அந்தரபுரம் ஸ்ரீ சாஸ்தா கோயிலில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT