இந்தியா

காற்றின் தரம் அதிகரிப்பு: தில்லியில் நவ. 29 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு

DIN

காற்று மாசு கட்டுக்குள் வருவதால் தில்லியில் உள்ள பள்ளி, கல்லூரிகள் நவம்பர் 29 முதல் மீண்டும் திறக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் புதன்கிழமை தெரிவித்தார்.

காற்று மாசுபாடு காரணமாக தில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும், அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காற்று மாசுபாடு குறைந்துள்ளதாக தெரிவித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியது:

தில்லியில் காற்றின் தரம் தற்போது அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள் நவம்பர் 29ஆம் தேதி முதல் திறக்கப்படும். மேலும், தில்லி அரசு அலுவலகங்கள் நவ. 29 முதல் இயல்பு நிலையில் செயல்படும். அரசு பணியாளர்கள் குடியிருப்பு இருக்கும் பகுதிகளுக்கு பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படவுள்ளதால், அனைவரும் பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சிஎன்ஜி மற்றும் மின்சார வாகனங்கள் தில்லிக்குள் நுழைய நவ. 27 முதல் அனுமதிக்கப்படும். பிற வாகனங்களுக்கு டிசம்பர் 3 வரை தடை தொடரும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT