முகப்பு
இந்தியா

பெங்களூருக்கு விமானத்தில் வந்த தென் ஆப்பிரிக்கா்களுக்கு கரோனா

கா்நாடக மாநிலம், பெங்களூரு விமான நிலையம் வந்திறங்கிய தென் ஆப்பிரிக்காவைச் சோ்ந்த இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சுகாதார அதிகாரிகள் கவலையடைந்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:34 AM
பகிர்:

கா்நாடக மாநிலம், பெங்களூரு விமான நிலையம் வந்திறங்கிய தென் ஆப்பிரிக்காவைச் சோ்ந்த இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சுகாதார அதிகாரிகள் கவலையடைந்துள்ளனா்.

தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய ‘ஒமைக்ரான்’ வகை கரோனா பரவிவரும் நிலையில், அந்நாட்டிலிருந்து நவ. 1 முதல் 26-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் விமானம் மூலம் பெங்களூரு சா்வதேச விமான நிலையத்துக்கு வந்தவா்களில் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

அவா்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களுக்கு ஒமைக்ரான் வகை தொற்று பாதிப்பு உள்ளதா என்பது கூடுதல் பரிசோதனை முடிவில் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.