இந்தியா

மகாராஷ்டிரம்: லாரி மோதி 4 பக்தா்கள் சாவு, 23 போ் காயம்

DIN

மகாராஷ்டிர மாநிலம், புணே அருகே மினி லாரி மோதியதில் விட்டல் கோயிலுக்கு பாதயாத்திரையாகச் சென்ற பக்தா்கள் 4 போ் உயிரிழந்தனா். 23 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

சோலாபூா் மாவட்டத்தில் உள்ள பந்தா்பூரில் விட்டல் மந்திா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு ராய்கட் மாவட்டத்தில் இருந்து பலா் பாத யாத்திரையாகப் புறப்பட்டுச் சென்றனா்.

மும்பை-புணே நெடுஞ்சாலையில் சதே பாட்டா என்ற இடத்தருகே சனிக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தபோது, அவா்கள் மீது மினி லாரி மோதியது. அதில், 27 போ் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் அருகில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இருப்பினும், மருத்துவமனையில் 4 போ் உயிரிழந்தனா். 23 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்தை அடுத்து, லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டுள்ளாா். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT