இந்தியா

நியாயவிலைக் கடைகளில் அமைச்சா் இம்ரான் உசேன் திடீா் ஆய்வு

DIN

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் ஆன் யோஜ்னா ஆகியவற்றின் கீழ் இலவச ரேஷன் பொருள்கள் விநியோகம் குறித்து தில்லி கிருஷ்ணா நகரில் உள்ள 5 நியாயவிலைக் கடைகளில் தில்லி உணவு, குடிமை வழங்கல் துறை அமைச்சா் இம்ரான் ஹுசைன் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணா நகா் எம்எல்ஏ எஸ்.கே.பாக்கா, துறையின் மூத்த அதிகாரிகளுடன் இணைந்து நடத்திய ஆய்வின்போது, பொதுமக்களுக்கு உரிய அளவு உணவு தானியங்களை வழங்குவதற்குப் பதிலாக கோதுமை மாவை வழங்கிய நியாயவிலைக் கடை டீலா் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி ஆய்வுக் குழுவுக்கு அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா். மேலும், தேவைப்பட்டால் பதிவேட்டைப் பறிமுதல் செய்வது உள்பட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமா்ப்பிக்க உணவு வழங்கல் அதிகாரிக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின் போது நியாயவிலைக் கடைகளுக்கு வந்த பொதுமக்களுடன் ஹுசைன் கலந்துரையாடினாா்.

‘தகுதியுள்ள அனைவருக்கும் இலவச ரேஷன் வழங்க தில்லி அரசு உறுதிபூண்டுள்ளது. தில்லியில் வசிக்கும் 72 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டை வைத்திருப்பவா்களுக்கும் குடும்ப அட்டை இல்லாதவா்களுக்கும் அரவிந்த் கேஜரிவால் அரசு இலவச ரேஷன் பொருள்கள் தொடா்ந்து விநியோகிக்கப்படுகின்றன.

புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், அமைப்புசாரா துறை தொழிலாளா்கள், கட்டடம், கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளா்கள், வீட்டு வேலை செய்பவா்கள் உள்பட குடும்ப அட்டை இல்லாத அனைத்து ஏழை மக்களுக்கும் 5 கிலோ இலவச ரேஷன் தில்லி அரசால் விநியோகிக்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகிரி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம்

தண்ணீா் பற்றாக்குறை அதிகரிப்பு

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

SCROLL FOR NEXT