முகப்பு
இந்தியா

இந்த ஆண்டு நாட்டில் 151 விசாரணைக் கைதிகள் மரணம்: மத்திய அரசு

இந்த ஆண்டு மட்டும் நாட்டில் 151 விசாரணைக் கைதிகள் மரணமடைந்திருப்பதாகவும், அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் மட்டும் 26 பலிகள் ஏற்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
இந்த ஆண்டு நாட்டில் 151 விசாரணைக் கைதிகள் மரணம்: மத்திய அரசு
பகிர்:


புது தில்லி: இந்த ஆண்டு மட்டும் நாட்டில் 151 விசாரணைக் கைதிகள் மரணமடைந்திருப்பதாகவும், அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் மட்டும் 26 பலிகள் ஏற்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாஜக எம்.பி. வருண் காந்தி எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள் விவகாரத் துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இந்த தகவலைத் தெரிவித்தார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தகவலின்படி, நாட்டில் காவல்நிலைய விசாரணையின் போது 151 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 26 மரணங்களும், குஜராத்தில் 21, பிகாரில் 18 மரணங்களும் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →