இந்தியா

தில்லியில் மகளிர் காங்கிரஸார் போராட்டம்; நாடாளுமன்றத்தை முற்றுகையிடச் சென்றதால் பரபரப்பு

உணவுப் பொருள்களின் விலை ஏற்றத்தைக் கண்டித்து தில்லியில் மகளிர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

DIN

உணவுப் பொருள்களின் விலை ஏற்றத்தைக் கண்டித்து தில்லியில் மகளிர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

எரிபொருள் மற்றும் உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு எதிராக மகளிர் காங்கிரஸ் கட்சியினர் தில்லியில் போராட்டம் நடத்தினர். 

நாடாளுமன்றம் அருகே மாட்டுவண்டியில் ஏறிக்கொண்டு எரிபொருள் மற்றும் உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் சாலையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதில் மகளிர் காங்கிரஸ் தலைவர் நீட்டா டி சௌசா, நடிகை நக்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

எரிபொருள் மற்றும் உணவுப் பொருள்களின் விலை உயர்வால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மகளிர் காங்கிரஸ் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீதிபதியை தாக்குவதா?வழக்குரைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கார்கே வலியுறுத்தல்!

பிளாக் நூடுல்ஸ்... நிகிதா தத்தா!

என்னவென்று சொல்வதம்மா... ராஷி சிங்!

பத்திரிகையாளர் சந்திப்பில் காந்தார படக்குழுவினர் - புகைப்படங்கள்

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ நடவடிக்கையில் 2 வீரர்கள் மாயம்! தேடுதல் பணி தீவிரம்!

SCROLL FOR NEXT