இந்தியா

எம்.பி.க்கள் இடைநீக்கம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

DIN

மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது  வேளாண் சட்டங்கள் ரத்து, பெகாஸஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதாக  காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும், திரிணமூல், சிவசேனை கட்சிகளைச் சோ்ந்த தலா இரு எம்.பி.க்களும், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த தலா ஒரு எம்.பி.யும் மாநிலங்களவையின் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்வதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இவர்களது இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று மாநிலங்களை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் கோரிக்கை வைத்தனர். எனினும், அவரது கோரிக்கை மறுக்கப்பட்டது.

இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலிருந்தும் வெளிநடப்பு செய்த காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT