கோப்புப்படம் 
இந்தியா

கல்வான் மோதலுக்கு காரணம் யார்? பரஸ்பர குற்றச்சாட்டுகளை சுமத்தி கொள்ளும் இந்திய, சீன நாடுகள்

இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவுவதற்கு மூலக் காரணம் இந்தியா என சீனா குற்றம்சாட்டியதற்கு இந்தியா பதிலடி அளித்துள்ளது.

DIN

கிழக்கு லடாக்கில் நடைபெற்ற மோதலுக்கு இந்தியாவே காரணம் என சீனா மீண்டும் குற்றம்சாட்டியிருந்தது. இதை கடுமையாக விமரிசித்த இந்தியா, "சீன ராணுவத்தின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளும் தன்னிச்சையான முயற்சிகள்தான் பிராந்தியத்தின் முன்பிருந்த நிலையை மாற்றி அமைசியை கெடுத்தது" என தெரிவித்துள்ளது.

சீனாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "எல்லை பகுதிகளில் அதிக அளவில் ராணுவ வீரர்களையும் ஆயுதங்களையும் சீனா தொடர்ந்து குவித்து வருகிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாகவே இந்திய பாதுகாப்பு படை அதற்கு ஏற்றவாறு ராணுவ வீரர்களை நிலைநிறுத்தியது.

நாட்டின் பாதுகாப்பில் இந்திய நலன்களை உறுதி செய்யும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இரு தரப்பு ஒப்பந்தங்களையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி இந்திய, சீன எல்லை பகுதிகளில் நிலவும் மீதமுள்ள பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண சீன தரப்பு முயற்சிக்கும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு" என்றார். 

இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவுவதற்கு மூலக் காரணமே புது தில்லிதான் என்றும் சீனா பகுதிகளை இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்ததாகவும் சீனா குற்றம்சாட்டியிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அரிந்தம் பாக்சி, "சில நாள்களுக்கு முன்பு, இந்தியா தனது நிலைபாட்டை தெளிவாக எடுத்துரைத்துள்ளது. சீனாவின் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என மறுப்பு தெரிவித்திருந்தது" என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய மேஜைப் பந்து போட்டி: கொங்கு கல்வி நிலையம் மாணவிக்கு தங்கப் பதக்கம்!

தீயசக்தி, தூய சக்தியைப் பற்றிக் கவலை இல்லை; எங்களிடமே மக்கள் சக்தி: எஸ். ரகுபதி!

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இருவா் கைது

கந்தா்வகோட்டை வட்டாரப் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT