கன்யா குமார் 
இந்தியா

‘காங்கிரஸை அழிக்க வந்தவர் கன்னையா குமார்’: ராஷ்ட்ரீய ஜனதா தளம்

காங்கிரஸ் கட்சியின் மற்றுமொரு நவ்ஜோத் சிங் சித்துதான் கன்னையா குமார் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சிவானந்த் திவாரி தெரிவித்துள்ளார்.

DIN

காங்கிரஸ் கட்சியின் மற்றுமொரு நவ்ஜோத் சிங் சித்துதான் கன்னையா குமார் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சிவானந்த் திவாரி தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் தலைவராக அறியப்பட்ட கன்னையா குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் சிவானந்த் திவாரி, கன்னையா குமார் இணைந்ததால் காங்கிரஸ் கட்சியில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

‘காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய கப்பல். அதனைக் காப்பாற்றினால் தேசத்தைக் காப்பாற்ற முடியும்’ என்ற கன்னையா குமாரின் கருத்துக்கு பதிலளித்த சிவானந்த் திவாரி,  ‘கன்னையா குமார் மற்றுமொரு நவ்ஜோத் சிங் சித்துவாகத்தான் இருப்பார். அவர் காங்கிரஸை அழிக்கவே அக்கட்சியில் இணைந்துள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார்.

‘காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல். அதனைக் காப்பாற்ற முடியாது எனத் தெரிவித்த திவாரி கன்னையா குமாரால் காங்கிரஸைக் காப்பாற்ற முடியாது’ என திவாரி தெரிவித்தார்.

கன்னையாகுமாரை காங்கிரஸில் இணைத்தது குறித்து அதிருப்தியில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் பிகாரில் காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

இந்தியன் வங்கியில் 1500 பட்டதாரிகளுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி!

SCROLL FOR NEXT