இந்தியா

பிரதமர் மோடியுடன் பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் இன்று சந்திப்பு

DIN

பஞ்சாப் முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னி பதவியேற்ற பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்திக்கவுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில்,

“தில்லியில் பிரதமர் மோடியை பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் இன்று சந்திக்கவுள்ளார். விவசாயிகளின் போராட்டம், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுதல் மற்றும் நெல் கொள்முதல் தேதியை ஒத்திவைத்தல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கவுள்ளார்.”

மேலும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்தது குறித்து கட்சியின் மேலிடத்திலும் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், அம்மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 18-ம் தேதி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT