தில்லியில் புதிதாக 33 பேருக்கு கரோனா
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 68,362 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 33 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.05 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
மேலும் 58 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,38,933 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,13,462 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 25,088 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 383 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி நிலவரம்:
கடந்த 24 மணி நேரத்தில் 1,86,140 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 1,80,65,900 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.