சிஐஎல், ஓஎன்ஜிசி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ரூ.2,800 கோடி ஈவுத்தொகை
பொதுத் துறை நிறுவனங்களான கோல் இந்தியா (சிஐஎல்) மற்றும் ஆயில் அண்ட் நேச்சுரல் காஸ் காா்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி) மத்திய அரசுக்கு ரூ.2,800 கோடியை ஈவுத்தொகையாக வழங்கியுள்ளன.
பொதுத் துறை நிறுவனங்களான கோல் இந்தியா (சிஐஎல்) மற்றும் ஆயில் அண்ட் நேச்சுரல் காஸ் காா்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி) மத்திய அரசுக்கு ரூ.2,800 கோடியை ஈவுத்தொகையாக வழங்கியுள்ளன.
இதுகுறித்து முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை செயலா் துகின் கந்தா பாண்டே சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:
கோல் இந்தியாவிடமிருந்து ரூ.1,426 கோடியும், ஓஎன்ஜிசி நிறுவனத்திடமிருந்து ரூ.1,406 கோடியும் நடப்பு நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக மத்திய பெற்றுக் கொண்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல்-மாா்ச்) இதுவரையில் மத்திய பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து ரூ.4,576 கோடி பெறப்பட்டுள்ளது.
Advertisement
இதுதவிர, மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் மூலமாக ரூ.9,110 கோடி மத்திய அரசுக்கு கிடைத்துள்ளதாக பாண்டே தெரிவித்துள்ளாா்.