‘பிரியங்கா காந்தியை விடுவிக்காவிட்டால்...’: நவ்ஜோத் சிங் சித்து எச்சரிக்கை 
இந்தியா

‘பிரியங்கா காந்தியை விடுவிக்காவிட்டால்...’: நவ்ஜோத் சிங் சித்து எச்சரிக்கை

கைது செய்யப்பட்டுள்ள பிரியங்கா காந்தியை விடுவிக்காவிட்டால் நாளை உத்தரப்பிரதேசத்தை நோக்கி ஒட்டுமொத்த பஞ்சாப் காங்கிரஸும் பேரணி செல்லும் என நவ்ஜோத் சிங் சித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

DIN

கைது செய்யப்பட்டுள்ள பிரியங்கா காந்தியை விடுவிக்காவிட்டால் நாளை உத்தரப்பிரதேசத்தை நோக்கி ஒட்டுமொத்த பஞ்சாப் காங்கிரஸும் பேரணி செல்லும் என நவ்ஜோத் சிங் சித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்க நேரில் சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்ததுடன் கைது செய்யப்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் கருத்து பதிவிட்டுள்ள பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, "இந்த சம்பவத்தில் மத்திய அமைச்சரின் மகனைக் கைது செய்யாமலும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை விடுவிக்காமலும் இருந்தால் பஞ்சாப் காங்கிரஸ் லக்கீம்பூரை நோக்கி பேரணியில் ஈடுபடும்" எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: ஆக. 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு

சிறுமிக்கு பாலியல் கொடுமை: தையல் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

பராமரிப்புப் பணி நிறைவு: பழனிக் கோயில் ரோப்காா் சேவை: நாளை முதல் இயக்கம்

மங்கம்மாள்புரம் மணல் குவாரிக்கு அனுமதி கூடாது: விவசாயிகள் மனு

போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT