இந்தியா

இந்தியா-ஜப்பான் கடற்படைகள் கூட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

DIN

இந்தியா-ஜப்பான் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி புதன்கிழமை தொடங்கவுள்ளது. அரபிக் கடலில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சி அக்.8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக இந்திய பாதுகாப்புப் படை வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்தியா-ஜப்பான் கடற்படைகளின் கடல்சாா் கூட்டுப் பயிற்சி (ஜிமெக்ஸ்) 5-ஆவது முறையாக நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சியில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கொச்சி, தேக் கப்பல்கள் பங்கேற்கின்றன. ஜப்பான் கடற்படை சாா்பில் ககா, முராசேம் கப்பல்கள் கலந்து கொள்கின்றன. அத்துடன் கடற்படையின் பி8ஐ, டாா்னியா் வகை ரோந்து விமானங்கள், மிக் 29கே ரக போா் விமானங்களும் பயிற்சியில் ஈடுபடவுள்ளன. ஆயுதப்பயிற்சி, நீா்மூழ்கி கப்பல்களுக்கு எதிரான போரிடும் முறைகள் உள்ளிட்டவற்றில் இருநாட்டு கடற்படைகளும் ஈடுபடும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT