ராகுல்காந்தி (கோப்புப்படம்) 
இந்தியா

நாளை (அக்.6) லக்கிம்பூர் செல்கிறார் ராகுல்காந்தி

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க ராகுல்காந்தி நாளை லக்கிம்பூர் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க ராகுல்காந்தி நாளை லக்கிம்பூர் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் பூதாகரமாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி நாளை (அக்.6) லக்கிம்பூர் செல்ல உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ராகுல்காந்தியும் உத்தரப்பிரதேசம் செல்ல இருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

இந்தியன் வங்கியில் 1500 பட்டதாரிகளுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி!

SCROLL FOR NEXT