இந்தியா

மத்திய சுகாதாரத்துறை சார்பில் 'மனநல விழிப்புணர்வு வாரம்' தொடக்கம்

DIN

வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி மனநல நாள் கடைப்பிடிக்கப்படுவதை அடுத்து, மத்திய அரசு சார்பில் 'மனநல விழிப்புணர்வு வாரம்' தொடங்கப்பட்டுள்ளது. 

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மனநல விழிப்புணர்வு பிரசார வாரத்தின் ஒரு பகுதியாக யுனிசெப்பின் உலக குழந்தைகள் அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். 

21 ஆம் நூற்றாண்டில் குழந்தைகள், இளம்பருவத்தினரின் மன நலம் குறித்த விரிவான தகவல்களை இது அளிப்பதாகவும் கரோனா தொற்றுநோய் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது இந்த அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி உலக மனநல நாள் கடைப்பிடிக்கப்படுவதை அடுத்து, செவ்வாய்க்கிழமை  தொடங்கி அக்டோபர் 10 ஆம் தேதி வரை மனநல விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது. 

மனநலம் குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்தும் பொருட்டும் மனநலன் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பொருட்டும் மனநல விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது. 

இதன் ஒரு பகுதியாக பல்வேறு பகுதிகளில் பேரணிகள், விழிப்புணர்வு பிரசாரங்கள், பிராந்திய மொழிகளில் குறும்பட வெளியீடு, போட்டிகள் உள்ளிட்டவை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

விவசாயிகளுக்கு கோடை பருவ நெல் நடவு பயிற்சி

எலக்ட்ரிக் கடையில் இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT