இந்தியா

உப்பு உடம்புக்கு நல்லதா? இல்லை என்பதே பதில்

PTI

ஆஸ்திரேலியா: சோடியம் எனப்படும் உப்பு.. நமது அன்றாட உணவில் முக்கிய அங்கம் வகிக்கும் ஒன்றாகும். ஒரு உணவை சுவையாக்குவதே அதில் சேர்க்கப்படும் உப்புதான். உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழியே உப்பின் அவசியத்தை விளக்குவதாக அமைந்துள்ளது.

ஆனால், இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த உப்பு உடம்புக்கு நல்லதா? ஏதேனும் உடல் நலப் பிரச்னையோடு மருத்துவரிடம் சென்றால் ஏன் உப்பைக் குறைத்துக் கொள்ளச் சொல்கிறார்கள்? 

ஆஸ்திரேலியாவிலுள்ள நியூகாஸ்டல் கல்லாகான் பல்கலை பேராசிரியர் கிளேர் கொலின்ஸ் நடத்திய ஆய்வுகளில் தெரிய வந்திருப்பது என்னவென்று பார்க்கலாம்.

சோடியத்தை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அது உயர் ரத்தக் கொதிப்புக்கு காரணமாகிறது, இதயம் தொடர்பான நோய்களுக்கு வழிகோலுகிறது, மாரடைப்பு மற்றும் பக்கவாதத்துக்கு அடிப்படையாகிறது.

எனவே, உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழிகளை எல்லாம் இந்த ஆய்வு முடிவுகள் கிழித்தெறிகின்றன. நல்லது என்று கூறப்படும் உப்பு, பால் பொருள்கள் உள்ளிட்டவற்றின் அளவுகளை நிர்ணயம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதையே உணர்த்துகின்றன.

சோடியத்தை உணவில் குறைத்துக் கொள்வதன் வாயிலாக பல பிரச்னைகளிலிருந்து விடுபடலாம் என்பதை நிரூபிக்கும் இந்த ஆய்வு, ஒரு நாளைக்கு ஒருவர் 2.3 கிராம் என்ற அளவில் உப்பை நிர்ணயித்துக் கொண்டால் நலமாக வாழலாம் என்கிறது.


அதேவேளையில், உப்பைக் குறைத்துக் கொள்வதால் மட்டுமே மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வராமல் தற்காத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட முடியாது என்றும் ஆய்வு கூறுகிறது.

தற்போது, உலகளவில், மக்களின் ஒருநாளைக்கு உணவில் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவு 3 - 5 கிராமாக உள்ளது. இந்த அளவு மேலும் அதிகரிக்கவோ அல்லது மிகவும் குறையும் போதே உடலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு எதிர்மாறான ஆய்வு முடிவுகளும் உள்ளன. ஆனால், உணவில் உப்பின் அளவை குறைத்து நிர்ணயித்துக் கொள்வதே சாலச் சிறந்தது என்றுதான் பலவும் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT