லக்கிம்பூர் விவகாரம்: உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கிறது 
இந்தியா

லக்கிம்பூர் விவகாரம்: உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கிறது

உத்திரப் பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் நடந்த கலவரம் தொடர்பாக தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

DIN

உத்திரப் பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் நடந்த கலவரம் தொடர்பாக தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

விவசாயிகள் - பாஜக இடையேயான மோதல் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் பூதாகரமாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் இன்று லக்கிம்பூர் கேரிக்கு செல்ல திட்டமிட்டனர்.

ஆனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை காரணமாக ராகுல் உள்ளிட்டோர் லக்கிம்பூர் செல்வதற்கு உத்தரப் பிரதேச அரசு இன்று காலை அனுமதி மறுத்த நிலையில், மாலையில் அனுமதி வழங்கியது.

ராகுல் காந்தி தலைமையில் லக்கிம்பூர் பகுதியில் போராட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT