இந்தியா

பி.எம். கேர்ஸ் நிதி: 35 இடங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம்

DIN

ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நாட்டில் கூடுதலாக 35 இடங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பி.எம்.கேர்ஸ் நிதியின் மூலம் அமைக்கப்படவுள்ள இத்திட்டப் பணிகளை உத்தரகண்ட் எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பி.எம். கேர்ஸ் நிதி மூலம் இதுவரை நாடு முழுவதும் 1,224 ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் 1,100 மையங்களில் 1,750 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. கரோனா இரண்டாவது அலையின் கோரதாண்டவத்திற்கு பிறகு ஆக்ஸிஜன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது.

யூனியன் பிரதேசங்கள், தீவுகள், மலைப்பகுதிகளில் அவசரகால ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்படவுள்ளது.

இதனை பராமரிப்பதற்காக 7 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்தையொட்டி விடுமுறை விடாத நிறுவனங்களுக்கு அபராதம்

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்க மாநில மாநாடு

நாளை திருமலையில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு

தீவிர சோதனைக்குப் பிறகே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT