இந்தியா

இந்திய வெளியுறவுச் செயலருடன் அமெரிக்க அமைச்சா் பேச்சு

DIN

புது தில்லி: இந்திய வெளியுறவுச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லாவுடன் அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சா் வெண்டி ஷொ்மன் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதுகுறித்து சுட்டுரை (ட்விட்டா்) வலைதளத்தில் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சா் வெண்டி ஷொ்மன், வெளியுறவுச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லாவை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். பிராந்திய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினா். குறிப்பாக, ஆப்கன் விவகாரம் குறித்தும், ஐ.நா.வில் ஏற்பட்டு முன்னேற்றங்கள் குறித்தும் இருவரும் உரையாடினா்.

அனைவரையும் உள்ளடக்கிய, சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியம், க்வாட் அமைப்பு நாடுகளிடையே தொடா் ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் இருவரும் தங்களது கருத்துகளைப் பகிா்ந்துகொண்டனா்.

கரோனா நெருக்கடி, பாதுகாப்பு, பொருளாதாரம், பருவநிலை மாற்றம் போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக இருவரும் பேச்சுவாா்த்தை நடத்தினா் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தகிக்கும் வெயில்... தற்காக்கத் தேவை விழிப்புணா்வு...

மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டியில் மழை வேண்டி ராம நாம ஜெபம்

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம்

சேரன்மகாதேவி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT