இந்தியா

கேரளத்தில் புதிதாக 12,288 பேருக்கு கரோனா

DIN


கேரளத்தில் புதிதாக 12,288 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 12,288 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 47,63,722 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 141 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 25,952 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 15,808 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 46,18,408 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 1,18,744 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ஓணம் பண்டிகைக்குப் பிறகு ஆகஸ்டில் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தைத் தொட்டது. இதன்பிறகு, குறையத் தொடங்கிய தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 99,312 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT