இந்தியா

மிசோரமில் ஒரேநாளில் 263 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு!

DIN

மிசோரமில் கடந்த 24 மணி நேரத்தில் 263 குழந்தைகள் உள்பட 1,302 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மிசோரம் மாநில சுகாதாரத்துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில்,

மிசோரமில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,302 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 263 பேர் குழந்தைகள். நேற்று மட்டும் 6 பேர் உள்பட இதுவரை 341 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக அய்ஸ்வால் மாவட்டத்தில் 728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் இன்றைய பாதிப்பில் 7 பேர் வெளிமாநில, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 

மிசோரத்தில் தற்போது 16,075 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை 86,213 ஆக உள்ளது.

மேலும், இதுவரை 6.84 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 4.59 லட்சம் பேர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

SCROLL FOR NEXT