மும்பையில் ரூ. 125 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் 
இந்தியா

மும்பையில் ரூ. 125 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

மும்பை துறைமுகத்தில் ரூ. 125 கோடி மதிப்பிலான 25 கிலோ போதைப் பொருளை வருவாய் புலனாய்வு பிரிவினர் புதன்கிழமை பறிமுதல் செய்துள்ளனர்.

ANI

மும்பை துறைமுகத்தில் ரூ. 125 கோடி மதிப்பிலான 25 கிலோ போதைப் பொருளை வருவாய் புலனாய்வு பிரிவினர் புதன்கிழமை பறிமுதல் செய்துள்ளனர்.

மும்பை நிவா ஷேவா துறைமுகத்தில் கண்டெய்னர் ஒன்றிலிருந்து 25 கிலோ ஹெராயின் வகை போதைப் பொருளை வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ. 125 கோடி எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு சம்பந்தப்பட்ட தொழிலதிபர் ஒருவரை கைது செய்துள்ள புலனாய்வு பிரிவினர் அக்டோபர் 11 வரை காவலில் எடுத்துள்ளனர்.

முன்னதாக, மும்பை சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் விருந்தில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT