இந்தியா

ஜப்பான் பிரதமருடன் மோடி தொலைபேசியில் ஆலோசனை

DIN

ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஃபுமியோ கிஷிடாவை பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வெள்ளிக்கிழமை தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது, அவருக்கு வாழ்த்து தெரிவித்துடன், இரு நாட்டு நட்புறவை மேம்படுத்தும் இந்தியாவின் ஆா்வத்தையும் தெரிவித்தாா்.

இது குறித்து தமது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமா், ‘ஃபுமியோ கிஷிடாவிடம் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினேன். ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்றுள்ளதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். சிறப்புமிக்க இந்திய-ஜப்பான் சா்வதேச நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், இந்திய-பசிபிக் பகுதியில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா ஆவலுடன் இருப்பதை அவரிடம் தெரிவித்தேன்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT