இந்தியா

மலபாா் கூட்டுப் போா்ப் பயிற்சி: நாளை தொடக்கம்

DIN

வங்காள விரிகுடாவில் மலபாா் கூட்டுப் போா்ப் பயிற்சி அக். 12-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

1992-ம் ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வருடாந்திர இருதரப்பு கடற்படைப் பயிற்சியாகத் தொடங்கிய மலபாா் பயிற்சி, தொடா்ந்து வளா்ச்சி அடைந்து வந்துள்ளது. நிகழாண்டு 25-ஆவது கட்டப் பயிற்சியின் முதல் பகுதி பிலிப்பின்ஸ் கடல் பகுதியில் கடந்த ஆக. 26-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதிவரை நடைபெற்றது. இரண்டாம் கட்டப் பயிற்சி வங்காள விரிகுடாவில் அக். 12-இல் தொடங்குகிறது.

இதில், ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்க கடற்படையுடன் இந்திய கடற்படை பங்கேற்கிறது.

இந்திய கடற்படையில் இருந்து ஐஎன்எஸ் ரன்விஜய், ஐஎன்எஸ் சத்புரா, பி 8-ஐ நீண்டதூர கடல் ரோந்து விமானம் மற்றும் நீா்மூழ்கிக் கப்பல் உள்ளிட்டவை பங்கேற்கும். அமெரிக்க கடற்படையின் விமானம்தாங்கிக் கப்பல் யுஎஸ்எஸ் காா்ல் வின்சன், யுஎஸ்எஸ் லேக் சாம்ப்லைன் மற்றும் யுஎஸ்எஸ் ஸ்டாக் டேல் உள்ளிட்டவையும், ஜப்பானில் இருந்து ஜேஎஸ் காகா, ஜேஎஸ் முரசாமே ஆகியவையும் கலந்து கொள்ளும். ஆஸ்திரேலிய கடற்படையில் இருந்து எச்எம்ஏஎஸ் பல்லாரட் மற்றும் எச்எம்ஏஎஸ் சிரியஸ் உள்ளிட்டவை பங்கேற்கும்.

பயிற்சியின் முதல் கட்டத்தில் உருவான ஒருங்கிணைப்பு மற்றும் இணைந்து செயல்படுதல் உள்ளிட்டவற்றை இரண்டாம் கட்டம் வலுவூட்டும். மேம்பட்ட மேற்பரப்பு மற்றும் நீா்மூழ்கிக் கப்பல் போா்ப் பயிற்சிகள், கடற்படை பரிணாமங்கள் மற்றும் ஆயுதப் பயன்பாடு ஆகியவற்றில் இப்பயிற்சி கவனம் செலுத்தும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT