இந்தியா

கேரளத்தில் புதிதாக 6,996 பேருக்கு கரோனா

DIN


கேரளத்தில் புதிதாக 6,996 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 10,691 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் திங்கள்கிழமை குறைந்துள்ளது.

மேலும் 84 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 16,576 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 40 பேர் வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்கள். 6,588 பேர் தொடர்பிலிருந்ததன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 333 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 48,01,796 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 26,342 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 46,73,442 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 1,01,419 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 66,702 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT