மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா 
இந்தியா

லக்கிம்பூர் விவகாரம்: மத்திய அமைச்சரின் மகனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்

லக்கிம்பூர் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை மூன்று நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

DIN

லக்கிம்பூர் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை மூன்று நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த வாரம் விவசாயிகள் மீது கார் ஏற்றியதில் 8 பேர் பலியாகினர். இச்சம்பத்தில், ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த சனிக்கிழமை ஆஷிஷ் மிஸ்ராவிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் அவரை கைது செய்து அன்று இரவே நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஷிஷ் மிஸ்ராவை காவல்துறையினர் மீண்டும் ஆஜர்படுத்தினர். அப்போது, காவல்துறை தரப்பில் வழக்கு குறித்து ஆஷிஷ் மிஸ்ராவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் போலீஸ் காவல் கேட்கப்பட்டது.

காவல்துறையின் கோரிக்கையை ஏற்று ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT