இந்தியா

தில்லி முதல்வரை எச்சரித்த போக்குவரத்துத் துறை அமைச்சர்

DIN

பஞ்சாப் - தில்லி சர்வதேச விமான நிலையம் வரை பேருந்து சேவையை மீண்டும் தொடங்காததை எச்சரித்து பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அமரீந்தர் சிங் ராஜா தில்லி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள பேருந்து சேவையை உடனடியாகத் தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

பஞ்சாப் முதல் தில்லி சர்வதேச விமான நிலையம் வரை பேருந்து சேவை இயக்கப்பட்டு வந்தது. எனினும் பல்வேறு காரணங்களால் கடந்த 2018-ஆம் ஆண்டு தில்லி அரசால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து கரோனா பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக பேருந்து சேவை தொடர்ந்து முடங்கியிருந்தது.

தற்போது பல இடங்களில் தளர்வுகள் வழங்கப்பட்டு போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று தில்லி முதல்வருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். 

மேலும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT