இந்தியா

காங்கிரஸில் இணைந்தார் உத்தரகண்ட் அமைச்சர் யஷ்பால் ஆர்யா

ANI

உத்தரகண்ட் போக்குவரத்துத்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான யஷ்பால் ஆர்யா இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன. இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தின் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் யஷ்பால் ஆர்யா தனது பதவியை இன்று ராஜிநாமா செய்தபின் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவரது மகன் எம்.எல்.ஏ. சஞ்சீவ் ஆர்யாவும் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

தில்லி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஹரிஷ் ராவத், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT