இந்தியா

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மோடி அரசு: அமித் ஷா புகழாரம்

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதி செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

DIN

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதி செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

தேசிய மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்ட நாளையொட்டி, 28 ஆவது ஆண்டு தின நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி அருண் குமார் மிஸ்ரா உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர், கடந்த ஏழு ஆண்டுகளில், சுமார் 60 கோடி தாழ்த்தப்பட்ட மக்கள், பல்வேறு அரசுத் திட்டங்கள் மூலமாக பயன்பெற்றுள்ளனர். அவர்களுக்காக அரசு இருக்கிறது என்பதை செயல்படுத்தி காட்டியுள்ளோம். 

சுமார் 10 கோடி பெண்களுக்கு கழிப்பறை வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் நான்கு கோடி வீடுகளுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு கோடி பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 

பிரதமர் மோடி தலைமையிலான அரசு தாழ்த்தப்பட்ட மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்துள்ளது' என்றார். 

மனித உரிமைகள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்காக 1993 அக்டோபர் 12 அன்று மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 1993-இன் கீழ் மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT