இந்தியா

நிலக்கரி பற்றாக்குறைக்கு மழையே காரணம்: அமைச்சர் விளக்கம்

DIN

மழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். 

நிலக்கரி பற்றாக்குறையால் நாட்டில் மின் உற்பத்தி பல்வேறு மாநிலங்களில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, தொடர் மழை காரணமாகவே நிலக்கரியின் சர்வதேச விலை அதிகரித்துள்ளது. இதனால் நிலக்கரிக்கு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். 

இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, மழை காரணமாக நிலக்கரி விலை ஒரு டன்னுக்கு ரூ.60 முதல் ரூ.190 வரை அதிகரித்துள்ளது.

இதனால், நிலக்கரி இறக்குமதி செய்து மின் உற்பத்தியில் ஈடுபடும் அனல் மின் நிலையங்கள் 15 முதல் 20 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது. சில மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.

அனல் மின் நிலையங்களுக்கு தொடர்ந்து நிலக்கரி வழங்கப்பட்டு வருகிறது. நிலக்கரியை இருப்பு வைத்துக்கொள்ள மாநிலங்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நிலக்கரி பற்றாக்குறை ஏற்படாது என்று உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT