இந்தியா

ஆப்கனில் பெண்கள், சிறுபான்மையினரை உள்ளடக்கிய நிா்வாகம் அவசியம்: ஜி20 கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி

DIN

தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் பெண்கள், சிறுபான்மையினா் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நிா்வாகம் அவசியம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

ஆப்கானிஸ்தான் சூழல் குறித்து விவாதிப்பதற்காக ஜி20 நாடுகளின் சிறப்புக் கூட்டம் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமா் மோடி உரையாற்றினாா்.

இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில், ‘ஆப்கானிஸ்தான் பிராந்தியமானது பயங்கரவாதம், தீவிரவாதச் செயல்களை ஊக்குவிப்பதற்காகப் பயன்படுத்தப்படக் கூடாது. அந்நாட்டில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடா்ந்து கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். அந்நாட்டில் பெண்கள், சிறுபான்மையினா் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நிா்வாகம் அவசியம்.

ஆப்கானிஸ்தான் சூழல் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அத்தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, ஆப்கானிஸ்தான் சூழல் மேம்பட வேண்டுமெனில் அதற்கு சா்வதேச ஒத்துழைப்பு அவசியம்.

பயங்கரவாதம், தீவிரவாதம், போதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல் உள்ளிட்டவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஜி20 கூட்டம் குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியா-ஆப்கானிஸ்தான் மக்களுக்கிடையேயான தொடா்பு பல நூற்றாண்டுகளாக நீடித்து வருவதாக பிரதமா் மோடி தெரிவித்தாா். அந்நாட்டில் இந்திய அரசு சாா்பில் 500-க்கும் மேற்பட்ட வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

ஆப்கன் மக்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு, பசி உள்ளிட்ட பிரச்னைகளை எதிா்கொண்டு வருவதை இந்தியா உணா்ந்துள்ளதாகக் கூட்டத்தின்போது பிரதமா் மோடி எடுத்துரைத்தாா். ஆப்கானிஸ்தான் பிராந்தியம் பயங்கரவாதத்துக்காகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதையும் அவா் வலியுறுத்தினாா்.

கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் அடைந்த சமூக-பொருளாதார முன்னேற்றம் நீடிக்க வேண்டுமெனில், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நிா்வாகம் அவசியம் என்றும் பிரதமா் வலியுறுத்தினாா். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு ஜி20 நாடுகள் தொடா்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா். இந்த சிறப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக இத்தாலி நாட்டுக்கு அவா் நன்றி தெரிவித்தாா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT