இந்தியா

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும்: ஐ.எம்.எஃப். கணிப்பு

DIN

நிகழாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என்று பன்னாட்டு நிதியம்(ஐ.எம்.எஃப்.) கணித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உலக பொருளதார நிலை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கரோனா பெருந்தொற்று காரணமாக, 2020-இல் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மைனஸ் 7.3 சதவீதமாக சரிவடைந்தது. 2021-இல் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 9.5 சதவீதமாகவும், 2022-இல் 8.5 சதவீதமாகவும் இருக்கும்.

அமெரிக்காவின் பொருளாதார வளா்ச்சி 2021-இல் 6 சதவீதமாகவும், 2022-இல் 5.2 சதவீதமாகவும் இருக்கும். இதேபோல், சீனாவின் பொருளாதார வளா்ச்சி 2021-இல் 8 சதவீதமாகவும், 2022-இல் 5.6 சதவீதமாகவும் இருக்கும்.

ஒட்டுமொத்தமாக உலகளாவிய பொருளாதார வளா்ச்சி 2021-இல் 5.9 சதவீதமாகவும், 2022-இல் 4.9 சதவீதமாகவும் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி, ஐ.எம்.எஃப். ஆகியவற்றின் வருடாந்திர கூட்டம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

SCROLL FOR NEXT