இந்தியா

தில்லியில் கடந்த 10 நாள்களில் 139 பேருக்கு டெங்கு பாதிப்பு

DIN

தில்லியில் அக்டோபர் மாதத்தில் மட்டும் 100 பேருக்கு மேல் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நாட்டில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் அதே சூழ்நிலையில் பல்வேறு பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

பருவமழை தொடங்கியுள்ளதால் டெங்குவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில், தில்லியில் கடந்த சில தினங்களாக டெங்கு பாதிப்பு உயர்ந்து வருகிறது. கடந்த செப்டம்பரில் 217 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அக்டோபரில் கடந்த 10 நாள்களில் மட்டும் 139 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனால் நடப்பு ஆண்டில் மொத்த பாதிப்பு 480 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இங்கு டெங்குவினால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. 

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த தில்லி அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT