முகப்பு
இந்தியா

தில்லியில் பாகிஸ்தான் தீவிரவாதி கைது

தில்லியில் தங்கியிருந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தீவிரவாதியை சிறப்புப் பிரிவு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Updated On : 12 அக்டோபர், 2021 at 12:29 PM
கைது செய்யப்பட்ட முகமது அஷ்ரஃப்
பகிர்:

தில்லியில் தங்கியிருந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தீவிரவாதியை சிறப்புப் பிரிவு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

தில்லி லட்சுமி நகர் அருகே ரமேஷ் பார்க் பகுதியில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தீவிரவாதி தங்கியிருந்த தகவல் சிறப்புப் பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது.

இதையடுத்து இன்று காலை சோதனை நடத்திய காவல்துறையினர், போலி இந்திய அடையாள அட்டையுடன் தங்கியிருந்த தீவிரவாதியை கைது செய்தனர். அவர், பாகிஸ்தானின் பஞ்சாபை சார்ந்த முகமது அஷ்ரஃப் என்பது தெரியவந்துள்ளது.

Advertisement

மேலும், அவரிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கி, 2 கை துப்பாக்கிகள், கையெறி குண்டு மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.