பயங்கரவாதத்தின் ஆதாரமாக ஆப்கானிஸ்தான் ஆகிவிடக் கூடாது: பிரதமர் மோடி
அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் ஆதாரமாக ஆப்கானிஸ்தான் ஆகிவிடக் கூடாது என ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
இந்தியாபயங்கரவாதத்தின் ஆதாரமாக ஆப்கானிஸ்தான் ஆகிவிடக் கூடாது: பிரதமர் மோடி
அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் ஆதாரமாக ஆப்கானிஸ்தான் ஆகிவிடக் கூடாது என ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் ஆதாரமாக ஆப்கானிஸ்தான் ஆகிவிடக் கூடாது என ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
ஆப்கானிஸ்தான் குறித்த காணொலி வாயிலான ஜி20 மாநாட்டை இத்தாலி நடத்தியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாடினார்.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டது:
"ஆப்கானிஸ்தான் குறித்த ஜி20 மாநாட்டில் பங்கேற்றேன். அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் ஆதாரமாக ஆப்கானிஸ்தான் ஆவதைத் தடுப்பது குறித்து வலியுறுத்தினேன். மேலும் ஆப்கன் மக்களுக்கும், ஒருங்கிணைந்த நிர்வாகத்துக்கும் தடங்கலற்ற அவசர உதவிகளை வழங்க அழைப்பு விடுத்தேன்."