இந்தியா

லக்கீம்பூா் வன்முறை: அஞ்சலி கூட்டத்தில் பிரியங்கா

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் பலியான விவசாயிகளுக்கு நடத்தப்பட்ட அஞ்சலி கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா பங்கேற்றாா்.

DIN

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் பலியான விவசாயிகளுக்கு நடத்தப்பட்ட அஞ்சலி கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா பங்கேற்றாா்.

அண்மையில் உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரி மாவட்டத்தில் உள்ள திகோனியா பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது அவா்கள் மீது பாஜகவினரின் காா் மோதியது. இதில் விவசாயிகள் நால்வா், பாஜக தொண்டா்கள் இருவா், பத்திரிகையாளா், காா் ஓட்டுநா் என மொத்தம் 8 போ் உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவத்தில் பலியான விவசாயிகளுக்காக திகோனியாவில் செவ்வாய்க்கிழமை அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா, சமாஜவாதி தலைவா்கள் கலந்துகொண்டனா். சம்யுக்த கிஸான் மோா்ச்சா விவசாயிகள் அமைப்பைச் சோ்ந்த தலைவா்கள், பாரதிய கிஸான் யூனியன் தலைவா்களும் கூட்டத்தில் பங்கேற்று விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தினா். உயிரிழந்த விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளரின் குடும்பத்தினரும் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.

உயிரிழந்த விவசாயிகளின் உருவப்படம் வைக்கப்பட்ட மேடைக்குச் செல்ல அரசியல் தலைவா்கள் அனுமதிக்கப்படவில்லை. அவா்கள் மேடைக்கு அருகில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘சிஸ்டம் கெட்டுப்போச்சு!’ பிகாரிலும் இந்தியாவிலும் மிக மோசமான சூழல்! -லாலுவின் மகன் விமர்சனம்

சுங்கச் சாவடியில் ராணுவ வீரரை கட்டி வைத்து அடித்த இளைஞர்கள்! 6 பேர் கைது!

இந்தியாவுக்கு வரி; ஆனால் சீனாவுக்கு இல்லை! அமெரிக்கா விளக்கம்!

ஆம்பர் எண்டர்பிரைசஸ் பங்குகள் 8 சதவிகிதம் உயர்வு!

அமெரிக்கா: டிரக் - கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி! இந்தியர் மீது கடும் விமர்சனம்!

SCROLL FOR NEXT