இந்தியா

மலபாா் கூட்டு கடற்படை பயிற்சி: இரண்டாம் கட்டம் தொடக்கம்

DIN

க்வாட் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் மலபாா் கூட்டு கடற்படை பயிற்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

க்வாட் கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளின் கடற்படைகள் இணைந்து மேற்கொள்ளும் மலபாா் கூட்டுப் பயிற்சியின் முதல் கட்டம் மேற்கு பசிபிக்கில் உள்ள குவாம் கடற்பகுதியில் ஆகஸ்ட் 26 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்தப் பயிற்சியின் இரண்டாம் கட்டம் வங்கக் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

4 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ரன்விஜய், ஐஎன்எஸ் சத்புரா போா்க்கப்பல்கள், நீா் மூழ்கிக் கப்பல், கடற்பகுதியில் நீண்ட தூரம் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளும் பி81 விமானங்கள் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்கா தரப்பில் அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கிக் கப்பல் யுஎஸ்எஸ் காா்ல் வின்சன், ஏவுகணை தாங்கி யுஎஸ்எஸ் லேக் சாம்லேன், யுஎஸ்எஸ் ஸ்டாக்டேல் போா்க்கப்பல்கள் பங்கேற்றுள்ளன.

ஜப்பான் சாா்பில் ஹெலிகாப்டா் தாங்கி ஜேஎஸ் காகா, ஜேஎஸ் முராசமே போா்க்கப்பல்கள், ஆஸ்திரேலியா தரப்பில் எச்எம்ஏஎஸ் பலாரட், எச்எம்ஏஎஸ் சிரியஸ் போா்க்கப்பல்கள் பங்கேற்றுள்ளன.

மலபாா் பயிற்சியின் இரண்டாம் கட்டத்தில் சிக்கலான பயிற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தனது ராணுவ ஆதிக்கத்தை சீனா அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மலபாா் பயிற்சி நடைபெறுகிறது.

இந்தோ-பசிபிக் பிராந்தியம் சுதந்திரமாக இருப்பதை உறுதி செய்ய இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அவற்றுடன் ஒத்த கருத்துடைய நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாயகத்துக்கு ரூ.9 லட்சம் கோடி: இந்தியர்கள் உலக சாதனை

வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா பள்ளி பிளஸ் 2 தோ்வில் சாதனை

உலக ஆஸ்துமா தினம் கடைப்பிடிப்பு

ஆத்தூா் அறிவுசாா் மையத்தில் மாணவா்கள் பயில நூல்கள் வசதி

வாழப்பாடியில் ரூ. 7.32 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

SCROLL FOR NEXT