லக்கிம்பூர் கலவரம்: விளக்குடன் இளைஞர் காங். பேரணி 
இந்தியா

லக்கிம்பூர் கலவரம்: விளக்குடன் இளைஞர் காங். பேரணி

லக்கிம்பூர் கலவரத்தைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கையில் டார்ச் விளக்குகளை ஏந்தியவாறு தில்லியில் பேரணி நடத்தினர்.

DIN

லக்கிம்பூர் கலவரத்தைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கையில் டார்ச் விளக்குகளை ஏந்தியவாறு தில்லியில் பேரணி நடத்தினர்.

இதில் ஏராளமான இளைஞர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். 

உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூா் கெரியில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 போ் கொல்லப்பட்டனா்.

மேலும் இந்தச் சம்பவத்தால் போராட்டம் நடத்திய விவசாயிகள் ஆத்திரத்தில் தாக்கியதில் காா் டிரைவா் உள்ளிட்ட பா.ஜ.க. தொண்டா்கள் 4 போ் உயிரிழந்தனா்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். 

பல்வேறு மாநிலங்களில் ஆளுநா் மாளிகை அருகிலும், யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநா் அலுவலகத்துக்கு எதிரிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்தவகையில் தில்லியில் இளைஞர் காங்கிரஸார் கைகளில் டார்ச் விளக்குடன் பேரணியில் ஈடுபட்டனர்.  இதில் ஏராளமான இளைஞர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT